tamilnadu

img

உ.பி. பாஜக அரசின் பசு பாதுகாப்புத் திட்டம் தோல்வி

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது முதலே, பசுக்கள் மீது பாசம் காட்டி வரும் ஆதித்யநாத் அரசு, தெருக்களில் ஆதரவற்று விடப்பட்ட பசுக்களை பாதுகாப்பதற்கு, ரூ. 200 கோடி நிதி ஒதுக்கி, மாநிலம் முழுவதும் பராமரிப்புக் கூடங்களை (மாட்டுக் கொட்டகைகள்) ஏற்படுத்தியது. சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பசுக்கள்இந்த பராமரிப்புக் கூடங்களில் அடைக்கப்பட்டன.

பசுக் கூடங்கள் பராமரிப்புக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். பசுக்கள் சரியாக பராமரிக்கப்படாத பட்சத்தில் மாவட்டஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். எனினும் பசுக்களை பராமரிக்க முடியவில்லை. அவை ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தன.இதற்கிடையே, பசுக்களைத் தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்கு நாளொன் றுக்கு ரூ. 30 விகிதம், மாதத்திற்கு ரூ. 900மானியம் வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார். பணம் கொடுப்பதன் மூலம் ஏராளமானோர் மாடு வளர்க்க தானாகவே முன்வருவார்கள் என்பது அவரது கணக்காகும். ஆனால், இந்த திட்டமும் தோல்வியிலேயே முடிந்திருப்பது, தற்போது தெரியவந்துள்ளது.சுமார் 1 லட்சம் பசு மாடுகள், பராமரிப்புக் கூடங்களில் அடைக்கப்பட் டுள்ள நிலையில், இதுவரை சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பசுக்களை மட்டுமே, மக்கள் தத்தெடுத்துள்ளதாக மாநில விலங்குகள் நலத்துறையின் தலைமைச் செயலரான பி.எல். மீனா தெரிவித்துள்ளனர்.ஆயிரக்கணக்கான பசுக்கள்இன்னும் பராமரிப்புக் கூடங்களில் தான் இருக்கின்றன என்று கூறியுள்ள பி.எல். மீனா, தற்போதைய திட்டத் திற்கு மாற்றாக, புதிய திட்டம் கொண்டு வருவதைப் பற்றி அரசுயோசித்து வருவதாகவும் தெரிவித் துள்ளார்.

;